இந்தியா

“நரி பேர்ல ஓட்டேரி நரி பேர்ல எழுதுங்க” - வைரலான பேங்க் ஸ்லிப்... அப்படி என்ன இருந்தது?

“நரி பேர்ல ஓட்டேரி நரி பேர்ல எழுதுங்க” - வைரலான பேங்க் ஸ்லிப்... அப்படி என்ன இருந்தது?

JananiGovindhan

பணம் டெபாசிட் செய்வதற்கான வங்கி ரசீதில் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய ராசி பெயரை எழுதியது குறித்த ஃபோட்டோதான் சமூக வலைதளத்தில் வட்டமடித்து வருகிறது.

ஏப்ரல் 12, 2022 தேதியிட்ட அந்த பே ஸ்லிப் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் டெபாசிட் செய்யப்பட்ட ஒன்றாகும்.

அந்த இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ள டெபாசிட் ஸ்லிப்பில், Amount (கட்டணம்) என்ற இடத்தில் தன்ராஷி (கட்ட வேண்டிய பணத்தின் மதிப்பு) என்பதற்கு பதில் ராஷி (ராசி பெயர்) என இந்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதில், 1,000 ரூபாய் டெபாசிட் செய்ய வந்த அந்த வாடிக்கையாளர் Amount என்ற இடத்தில் இந்தியில் ராஷி என இருந்ததால் தன்னுடைய துலாம் ராசி பெயரை எழுதியிருக்கிறார். இந்த ஃபோட்டோதான் தற்போது வைரலாகி வருகிறது.

இதனை பகிர்ந்த ட்விட்டர் பயனர், “மக்கள் எந்த அளவுக்கு புத்திசாலியாக இருக்கிறார்கள்” என கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

அதில், “அந்த வாடிக்கையாளர் தவறாக புரிந்திருந்தாலும், வங்கி தரப்பில்தான் இதனை சரிசெய்ய வேண்டும். Rashiக்கு பதில் Dhanrashi என்றுதான் அச்சிட்டிருக்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.