இந்தியா

சீட்டா புலிகளின் அதிரடி தாக்குதல்... குட்டியைக் காப்பாற்றிய தாய் ஒட்டகச்சிவிங்கி

சீட்டா புலிகளின் அதிரடி தாக்குதல்... குட்டியைக் காப்பாற்றிய தாய் ஒட்டகச்சிவிங்கி

webteam

ஒரு பரந்த புல்வெளியில் தாய் ஒட்டகச்சிவிங்கியும் குட்டியும் அமைதியாக உலவிக்கொண்டிருக்கின்றன. அந்த நேரத்தில் திடீரென கூட்டமாகப் பாய்ந்துவரும் சிவிங்கிப் புலிகள் குட்டியைத் தாக்க முனைகின்றன. இதுபற்றிய காணொலி சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா, இந்த 33 வினாடிகள் ஓடக்கூடிய காணொலியை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு நெருக்கடியான சூழலில் குட்டியைக் காப்பாற்றி தாயன்பைப் பறைசாற்றும் தாய் ஓட்டகச்சிவிங்கியின் செயல் பலருடைய இதயங்களைத் தொட்டுள்ளது.

சிவிங்கிப் புலிகள் பாய்ந்து வரும்போது, தாய் அதைக் கண்டு அஞ்சாமல் காலைத் தூக்கிப் போராடுகிறது. அது துணிந்து நின்று குட்டியைக் காப்பாற்றும் காட்சி மெய்சிலிர்க்கவைக்கிறது. இந்த உணர்ச்சிகரமான காணொலி 9 ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. ஆயிரம் லைக்ஸ் குவிந்துள்ளது.

இதற்குக் கருத்துத் தெரிவித்துள்ள ஒரு பதிவர், "அம்மா என்பது அம்மாதான். அம்மாவின் அன்புக்கு நிகராக வேறு எதுவும் இல்லை" என்று எழுதியுள்ளார்.