உ.பி முகநூல்
இந்தியா

அசைவம் சமைத்து தர சொல்லிய கணவர்; செங்கலால் மண்டையை உடைத்த மனைவி! உ.பி.யில் கொடூர கொலை!

அசைவ உணவைக் கேட்டதற்காக தனது கணவரின் தலையை செங்கற்கல்லால் அடித்து, மனைவியே மூளையை வெளியே எடுத்த கொடூர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அசைவ உணவைக் கேட்டதற்காக தனது கணவரின் தலையை செங்கற்கல்லால் அடித்து, மனைவியே மூளையை வெளியே எடுத்த கொடூர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் சத்யபால்(40), காயத்ரி தேவி (39) என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதியினருக்கு திருமணமாகி 20 ஆண்டுகாலம் ஆகும் சூழலில், மகள் பிஏ பட்டப்படிப்பும், மகன் 12-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

போலீசார் அளித்த தகவலின்படி, காயத்ரி சைவ உணவை உண்பவர், ஆனால், சத்யபால் அசைவ உணவு உண்பவர். இதனாலேயே காயத்ரிக்கும் சத்யபாலுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிலசமயங்களில் இந்த வாக்குவாதம் கை கலவரத்தையே உண்டாக்கியுள்ளது. இதனால், சத்யபால் காயத்ரியை அடிக்கடி அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று சத்யபால் , தனது மனைவியிடம் அசைவ உணவை சமைத்து தரும்படி கேட்டுள்ளார். ஆனால், காயத்ரி இதனை மறுத்துள்ளார். இதனால், சத்யபாலுக்கும் காயத்ரிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இந்நிலையில், காயத்ரி செங்கலை எடுத்து, கணவரை தாக்கியுள்ளார். சத்ய பால் வெளியே தப்பித்து ஓட முயற்சி செய்தும், மீண்டும் பலமாக அவரை தாக்கியுள்ளார். இதனால், ஒரு சமயத்தில் சத்யபாலின் மூளையே வெளியில் வந்தது. ஆனால், அப்போதும் அவர் நிறுத்தவில்லை. இதனால் சம்பவ இடத்திலேயே சத்ய பால் உயிரிழந்தார்.

இது குறித்து காயத்ரி கூறுகையில்,”அன்றைய தினம் அசைவம் செய்து கொடுக்க பணம் இல்லாததால் மறுத்தேன். இதனாலேயே, எனது கணவர் அடிக்கடி என்னை அடிப்பார். இதன் காரணமாகவே, ஆத்திரத்தில் இதை செய்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காயத்ரியின் தாயார் இது குறித்து தெரிவிக்கையில், ”காயத்தி சில நாட்களுக்கு முன்பு மனநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார். இவர் வெளிதோற்றத்தில்தான் எந்த பிரச்னையும் இல்லாதவர்போல இருக்கிறார். ஆனால், இவரின் மனநிலை இன்னும் சரியாகவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சத்யபாலின் உடல் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேலும், முதற்கட்ட விசாரணையில், காயத்ரிக்கு இன்னும் மனநிலை சரியாகாமல் இருக்கலாம் எனவும், அவரின் சிகிச்சை தொடர்கிறது என்பது உறுதியாகியுள்ளது என்றும் போலீசார் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில், இக்கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.