லாரி ஓட்டுநர் ராஜேஷ் முகநூல்
இந்தியா

”ஜாலியா சமைக்கிறேன்” மாதம் ரூ.5-10 லட்சம் சம்பாத்தியம்; யூட்யூப் சேனல் மூலம் பிரபலமான லாரி ஓட்டுநர்!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், தற்போது யூட்யூப் பிரபலமாக மாறி, மாதத்திற்கு ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கும் ஒருவராக மாற்றியுள்ளது ,கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், தற்போது யூட்யூப் பிரபலமாக மாறி, மாதத்திற்கு ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கும் ஒருவராக மாற்றியுள்ளது ,கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் மாதம் 20,000 ரூபாய் சம்பளம் பெருவதற்கே, ஏராளமான சவால்களையும், மனக்கசப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. அப்படியிருக்க, ஜார்க்கண்ட்டை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், தனது சொந்த யூட்யூப்பின் மூலம் மாதம் மட்டுமே கிட்டதட்ட அதிகப்பட்சமாக ரூ.10 லட்சம் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாகவே யூட்யூப்பின் புழக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டிற்கு ஒரு யூட்யூப் சேனை தொடங்கி, அதில் டிரெண்டாகி, சாதரண மக்கள் கூட திரைப்பிரபலங்களுக்கு ஈடாக யூட்யூப் பிரபலமாகி வருகின்றனர். இந்தவரிசையில் வருகிறார் லாரி ஓட்டுநரான ராஜேஷ் ரவானி.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவரான, ராஜேஷ் ரவானி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக லாரி ஓட்டுவதில் அனுபவம் கொண்டவர். லாரி ஓட்டுநராக மாதத்திற்கு 25-30 ஆயிரம் வரை வருமானம் பெற்றுவருகிறார். லாரி ஓட்டுவதை தனது வேலையாக செய்துவரும் ராஜேஷுக்கு சமையலின் மீது அளவு கடந்த ஆர்வமும் இருந்துள்ளது.

இதனால், சிலரின் வேண்டுகோளின் பேரில், ”r rajesh vlogs” என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் வெறும் வாய்ஸ் ஓவரில் தொடங்கிய இவருக்கு பெரும் வரவேற்பு இல்லை. இருப்பினும், தொடர்ந்து முயற்சித்த ராஜேஷ் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, சமையல் செய்ய துவங்கியுள்ளார். இதன் மூலம், கிட்டதட்ட 18 லட்சம் சப்ஸ்கிரைப்பர்களை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில்தான், வாய்ஸில் மட்டுமே விடியோ பதிவிட்ட ராஜேஷ், பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, திரையில் தோன்றி சமைத்து வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். இவரின் சேனலின் பிரத்யேக விஷயம் என்னவென்றால், லாரியின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அங்கு கிடைக்கும் உணவுப்பொருட்களை கொண்டு சமைக்க ஆரம்பித்துள்ளார். இதுதான், தற்போது இவரை யூட்யூப் பிரபலமாக மாற்றியுள்ளது.

இவர் இப்படி பதிவிட்ட முதல் வீடியோவே, ஒரு நாளில் நான்கரை லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது, 1.86 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்களை பெற்றுள்ளார்.

இப்படி லாரி ஓட்டும் வேலை மற்றும் யூட்யூபராக ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளையும் செய்த ராஜேஷ், யூட்யூப்பின் மூலம் மாதத்திற்கு 4-5 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும், அதிகப்பட்ச வருமானமாக ஒரு மாதம் 10 லட்சம் சம்பாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம், தனது கிராமத்தில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி வருகிறாராம். ஒரு விபத்தின் காரணமாக தனது கையில் பலத்த காயத்தை அடைந்த ராஜேஷ் ,இதோடே வாகனத்தை ஓட்டிவந்து, தற்போது கடின முயற்சிக்கு பிறகு நல்ல ஒரு நிலையை அடைந்துள்ளார். இந்த உண்மை சம்பவம் பலருக்கு நல்ல ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.