இந்தியா

அருணாச்சல பிரதேசம்: மாதிரி கிராமத்துக்கு தானமாக நிலம் வழங்கிய தம்பதி!

அருணாச்சல பிரதேசம்: மாதிரி கிராமத்துக்கு தானமாக நிலம் வழங்கிய தம்பதி!

webteam

அருணாச்சல பிரதேசத்தில் மாதிரி கிராமத்தை உருவாக்குவதற்காக தங்களுக்குச் சொந்தமான 22 ஆயிரம் சதுர மீட்டர் மதிப்பிலான நிலத்தை இலவசமாக வழங்கியுள்ள தம்பதியை மக்கள் பாராட்டிவருகின்றனர்.

இங்குள்ள எல்லைப் பாதுகாப்புச் சாலையில் உள்ள கெராங்க் மற்றும் கீக் கிராமங்களுக்கு இடையில் ஜிபி - மின்லி டேட்டோ தம்பதிக்குச் சொந்தமான நிலம் உள்ளது. மேற்கு சியாங் மாவட்டத்தின் ஆலோ பகுதிக்கு அருகில் உள்ள நிலத்தை ஒரு மாதிரி கிாரமத்தை உருவாக்குவதற்கு தானமாக வழங்கியுள்ளார்கள்.

புதிய மாதிரி கிராமத்திற்கு மின்லி - கிபி தம்பதியின் பெயரிடப்பட்டு எம்ஜி கிராமம் என அழைக்கப்படுகிறது. சாலை வசதிகள், குழந்தைப் பூங்கா, விளையாட்டு மைதானம், ஒரேமாதிரியான ஒன்பது வீடுகளை அந்த கிராமத்தில் அமைக்க மூன்று ஆண்டுகளாக அவர்கள் பெருமுயற்சி செய்துள்ளனர்.

"இங்கு கழிப்பறை வசதிகளே இல்லை. அதற்கு திறந்தவெளிகளைத்தான் பயன்படுத்திவந்தனர். பல பேருடைய உதவியுடன் கிராமத்தில் மின் வசதிகளையும் நவீன கழிப்பறைகளையும் ஏற்படுத்தினோம். சாலைப்பகுதிக்கு அருகில் எங்களுக்குச் சொந்த நிலம் இருந்தது. அதனை கிராம மக்களுக்குத் தேவையான பிரார்த்தனைக் கூடம் அமைக்கக் கொடுத்துவிட்டோம்" என்கிறார் மின்லி.

கோப்புப் படம் 

இந்த தம்பதியின் உதவியை அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெம்மா காண்டூ பாராட்டியுள்ளார்.