எருமை freepik
இந்தியா

ஒரு எருமை மாட்டுக்கு இருவர் உரிமை.. திணறிய போலீஸ்.. இறுதியில் தீர்வுகண்ட எருமை.. உ.பியில் ருசிகரம்!

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் ராய் அஸ்கரன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தலால் சரோஜ். இவர் வளர்த்துவந்த எருமை மாடு வழிதவறி காணாமல் போய்விட்டது. இதையடுத்து காணாமல் போன எருமை மாட்டை நந்தலால் தொடர்ந்து தேடி வந்துள்ளார். இந்த நிலையில், மாடு காணாமல் போய் 3 நாட்கள் கழித்து, பக்கத்து கிராமமான புரேரி ஹரிகேஷில் தன்னுடைய எருமை மாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளார். எருமை மாட்டைப் பார்த்த சந்தோஷத்தில் அதை அழைத்துச் செல்ல நந்தலால் முற்பட்டுள்ளார்.

அப்போது, ஹனுமான் சரோஜ் என்பவர், நந்தலாலின் எருமை மாட்டைப் பிடித்து வைத்திருந்ததுடன் அதற்குச் சொந்தம் கொண்டாடியுள்ளார். இதனையடுத்து நந்த்லால், ஹனுமான் சரோஜ் மீதுபோய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க: வெற்றிக் கொண்டாட்டம் முடிந்தபின் இங்கிலாந்துக்குப் பயணம்.. அவசரமாய் புறப்பட்டுச் சென்ற விராட் கோலி!

இருப்பினும், அவர்களால் இந்தப் பிரச்னையையும் தீர்த்துவைக்க முடியவில்லை. இருவருமே எருமை மாடு தங்களுடையது எனக் கூறியுள்ளனர். இறுதியாக, இந்த பிரச்னையை தீர்க்க காவலர்கள் முடிவெடுத்தனர். ’எருமை மாட்டை சாலையில் தனியாக விடுகிறோம். உங்களில் அது யார் பின்னே வருகிறதோ, அவர்களுக்குத்தான் இந்த எருமை மாடு சொந்தம்’ எனக் கூறி அந்த மாட்டை சாலையில் விட்டுள்ளனர்.

எருமை

இறுதியில், அந்த எருமை மாடு நந்தலாலைத் தொடர்ந்து ராய் அஸ்கரன்பூர் கிராமத்திற்குச் சென்றது. அதன் முடிவின்படி எருமை நந்தலாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிக்க: ரோகித் மற்றும் விராட் ஜெர்சி நம்பருக்கு ஓய்வா? ராபின் உத்தப்பா எதிர்ப்பு!