இந்தியா

ஓடும் வெள்ள நீரில் மூழ்கிய நபர்: தண்ணீருக்குள் குதித்து காப்பாற்றிய 12 வயது சிறுவன்!

ஓடும் வெள்ள நீரில் மூழ்கிய நபர்: தண்ணீருக்குள் குதித்து காப்பாற்றிய 12 வயது சிறுவன்!

webteam

உத்ரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில் உள்ள கோஷி ஆற்றில் பெருக்கெடுத்த நீரில் மூழ்கிக்கொண்டிருந்த,  நபரை, 12 வயது சிறவன் ஆற்றில் குதித்துக் காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்துடன் மக்களால் பாராட்டப்படுகிறது. 

நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தச் சிறுவன் உடனடியாக செயல்படாமல் இருந்திருந்தார், அந்த மனிதர் உயிர்பிழைத்திருக்கமுடியாது என அரசு அதிகாரி ரவி சைனி தெரிவித்தார்.

சம்பவம் நடந்த அன்று பாலத்தில் இருந்து அந்த மனிதர் ஆற்றில் குதித்திருக்கிறார். அவர் உதவி என்ற கத்தியதை சிறுவன் பார்த்திருக்கிறான். அங்கிருந்து பலரும் பார்த்துவிட்டு அமைதியாக இருந்துள்ளனர். இதைக் கண்ட அந்தச் சிறுவன் திடீரென ஆற்றில் குதித்துக் காப்பாற்றியுள்ளான். பின்னர் அவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தண்ணீரில் குதித்தவருக்கு 24 வயதுக்கு மேல் இருக்கும் என்றும், அவரை 12 வயது சிறுவன் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியது அனைவருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

"பாலத்தில் அந்தச் சிறுவன் நின்றுகொண்டிருந்தான். ஆற்றில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மனிதரைப் பார்த்ததும் அவன் உடனே குதித்துவிட்டான். அவர் ஆற்றின் நடுவில் அடித்துச் செல்லப்பட்டிருந்தார். பின்னர் 15 நிமிடங்கள் போராடி அவரைத் தேடிக் காப்பாற்றினான். அடுத்து ஒரு நண்பரின் உதவியுடன் அந்த மனிதர் ஆற்றுக்கு வெளியே கொண்டுவரப்பட்டார்" என்றார் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர்.

ஆற்றில் இருந்து காப்பாற்ற மனிதர், மனநிலை தவறியவராக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் எனவும் அதிகாரி சைனி கூறினார்.