இந்தியா

கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்

கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்

webteam

கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய பட்ஜெட் உரையின்போது மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் ‘இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள்’ திட்டம் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும் என்றார்.

புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சிறந்த கல்வியை வழங்கும் வகையில் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.