ஆதார் எண் மற்றும் கைரேகையை மட்டும் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் எண் மற்றும் கைரேகையை மட்டும் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்தார். இதுவரை 99 சதவீத இளைஞர்கள் ஆதார் எண் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இனி ரொக்கமோ, இணைய தள இணைப்போ, செல்ஃபோனோ இல்லாமல் ஆதார் எண்ணைக் கொண்டு பணத்தை செலுத்தவும், பெறவும் முடியும் என கூறினார்.
நாடு முழுவதும் 111 கோடி பேருக்கு ஆதார் எண் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 99 சதவீதம் பேர் இளைஞர்கள் எனவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ஆதார் பே என்ற பெயரிலான இந்த வசதியை ஏற்படுத்த இதுவரை 14 வங்கிகள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.