இந்தியா

கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள்: ஆளுநருக்கு விவசாயிகள் உருக்கமான கடிதம்

கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள்: ஆளுநருக்கு விவசாயிகள் உருக்கமான கடிதம்

webteam

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கக் கோரி மாநில ஆளுநருக்கு 91 விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர். 

மகாராஷ்ட்ரா மாநிலம் புல்தானா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கடிதத்தில் கூறியுள்ளனர். தங்கள் நஷ்டத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்காததால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாகக் கூறியுள்ள விவசாயிகள், நெடுஞ்சாலைக்காக தங்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், வாழ இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள விவசாயிகள், தங்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கடந்த 6ஆம் தேதி சிக்கில் இருந்து மும்பையில் உள்ள மராட்டிய சட்டசபை நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணியை தொடங்கினர். இதில் 25 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக மாநில அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். பேரணி செல்ல செல்ல ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். மொத்தம் 5 நாட்கள் 180 கிலோமீட்டர் வெறுங்கால்களுடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். இந்நிலையில் தற்போது  கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கக் கோரி மாநில ஆளுநருக்கு 91 விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர்.