நீதிமன்றத் தீர்ப்பு, சிறை twitter page
இந்தியா

9 வயது மகள் அளித்த சாட்சியம்... தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

நீதிமன்றத்தில் 9 வயது மகள் அளித்த சாட்சியத்தின் பேரில், அவருடைய தந்தைக்கே ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Prakash J

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

உத்தரப் பிரதேசம் பரேலி பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் அகமது. மருத்துவரான இவருக்கு திருமணமாகி, அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் தற்போது ஜாபல்பூரில் வசிக்கின்றனர். இந்த நிலையில் இவர், இந்து மதத்தைச் சேர்ந்த நிஷா தேவி என்பவரைக் காதலித்துள்ளார். இதற்காக தன்னுடைய மதத்தையும், தனக்குத் திருமணமான விஷயங்களையும் மறைத்துள்ளார். தவிர, தன்னுடைய பெயர் ராஜூ சர்மா (இக்பால் அகமது) எனவும் நிஷாவிடம் கூறியுள்ளார். இதற்கிடையே இவர்களுடைய திருமணம் இந்து முறைப்படி, கடந்த 2012ஆம் ஆண்டு, சஹாரன்பூரில் நடைபெற்றது. இந்த திருமணத்தின் மூலம் நிஷாவுக்கும் ராஜூ சர்மாவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

இந்த நிலையில், ராஜூ சர்மா, தன்னுடைய இரண்டாவது மனைவியான நிஷாவை, தன் சொந்த ஊரான பரேலியில் உள்ள மீராகன்ஜ்க்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றபோதுதான் நிஷாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராஜூ சர்மா இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி உள்ளது என்றும் நிஷாவுக்கு அப்போதுதான் தெரியவந்துள்ளது. தன்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் தெரியவந்ததையடுத்து, நிஷாவை இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்லி இக்பால் வற்புறுத்தியதாகவும், இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி நிஷா தனது வீட்டில் இறந்துகிடந்தார்.

இதுகுறித்து நிஷாவின் மகள், அவருடைய தாய்வழி பாட்டியிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இக்பால் தலைமறைவானார். நிஷாவின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து இக்பாலைத் தேடிவந்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் நிஷா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்து தெரியவந்தது. இதையடுத்து 3 மாதத்துக்குப் பின் இக்பால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு பரேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது நிஷாவின் 9 வயது மகள் அளித்த சாட்சியம்தான் தற்போது அவரது தந்தைக்கு தண்டனையை வாங்கித் தந்துள்ளது. நீதிமன்ற விசாரணையின்போது அவர், ”எனது தாய் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது, தந்தை இக்பால் மற்றும் அவருடன் சேர்ந்து இன்னும் இரண்டு பேர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்’’ என சாட்சியம் அளிக்க, அதனடிப்படையில் மருத்துவர் இக்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து பரேலி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.