ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 9 பேர் காணாமல் போயினர்.
வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிப் பொழிவு சமீபகாலமாக அதிகமாக இருக்கிறது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தாரா பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று பனிச்சரிவில் சிக்கியது. இதில் காரில் இருந்த 6 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேரும் காணாமல் போயுள்ளனர். இவர்களும் பனிச்சரிவில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். கடும் பனிமூட்டம், குளிர் காரணமாக அவர்கள் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.