இந்தியா

சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்: கங்கையில் மூழ்கி 9 பேர் பலி

சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்: கங்கையில் மூழ்கி 9 பேர் பலி

webteam

பீகாரில் சுற்றுலா சென்ற 9 பேர் கங்கை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது. 

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ளது ’மாஸ்டனா காட்’  என்ற பகுதி. இங்கு விடுமுறை நாளை கழிப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் உட்பட 11 பேர் சுற்றுலா வந்தனர். அப்போது கங்கை நதியையொட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கால் தவறி ஆற்றில் விழுந்தான். இவனை காப்பாற்றுவதற்காக அவனுடன் வந்திருந்த அனைவரும் ஆற்றில் குதித்தனர். இதில் எதிர்ப்பாராத விதமாக 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 2 பேரின் உடலை காணவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவீரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கங்கை ஆற்றில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். சிறுவனை காப்பாற்ற சென்று அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தாரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.