இந்தியா

ரயில்வே மருத்துமனைகளில் 86 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்: மத்திய அரசு

ரயில்வே மருத்துமனைகளில் 86 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்: மத்திய அரசு

நிவேதா ஜெகராஜா

நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 86 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நாடு முழுவதும் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான மருத்துவமனைகளில் ஏற்கெனவே 4 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 52 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்பொழுது 30 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க உதவியாக இருக்கும்.

நாடு முழுவதும் உள்ள 86 ரயில்வே மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் 2,539-லிருந்து 6,972 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. வென்டிலேட்டர்கள் எண்ணிக்கை 62-லிருந்து 296 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவுக்கான படுக்கைகள் 273-லிருந்து 573 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.