இந்தியா

‘தெலுங்கானாவில் 90 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் பட்டியலினத்தவர்கள்’ அரசு ஆய்வில் தகவல்

‘தெலுங்கானாவில் 90 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் பட்டியலினத்தவர்கள்’ அரசு ஆய்வில் தகவல்

rajakannan

தெலுங்கானா மாநிலத்தில் 80-90 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா அரசின் தொழிலாளர் நலத்துறை மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறை முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் உள்ள 56 மண்டலங்களில் 9,724 குழந்தை தொழிலாளர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். தற்போது இரண்டாம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகின்றது. 

6-8 வயதுடைய 15 குழந்தைகள் 10 மாவட்டங்களில் இருந்து கண்டறியப்பட்டுள்ளனர். 9-14 வயதுடைய 1,605 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். குழந்தை தொழிலாளர் சட்டம் 2016ன் படி 14 வயத்துக்கு மேல் உள்ள 18 வயதிற்குள்ள சிறுவர்களும் இளம் பருவத்தினரே. அதன்படி 15-18 வயதுடைய 8,105 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் யாரும் பள்ளிக்கு செல்லவில்லை என்று தகவலும் தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வு குறித்து தொழிலாளர் துறை அதிகாரி கூறுகையில், “குறைந்தபட்சம் 80-90 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுஒரு மாதிரி ஆய்வுதான். ஆய்வு முழுமை அடையும் போது எண்ணிக்கை உயரவும் செய்யலாம்” என்றார்.