ஜிகா வைரஸ் முகநூல்
இந்தியா

கர்நாடகா | தமிழக எல்லைப் பகுதியில் 8 பேரை தாக்கிய ஜிகா வைரஸ்! தீவிரமடைந்த தடுப்பு நடவடிக்கை!

கர்நாடக மாநிலத்தில் 8 பேருக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

PT WEB

கர்நாடக மாநிலத்தில் 8 பேருக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான ஆனேக்கல் தாலுகாவிற்குட்பட்ட ஜிகனி மற்றும் ஹாரகத்தே பகுதியில் ஆறு பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து அங்கு முகாமிட்ட மருத்துவக்குழுவினர், வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஷிவமொகா மாவட்டத்திலும் இருவருக்கு ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொடர் தலைவலி, காய்ச்சல், கண் சிவந்துபோவது, அலர்ஜி இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் சுகாதார மையத்தை அணுகுமாறு, பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.