பஞ்சாப் மாநிலத்தில் 75 வயது முதியவர் ஒருவர் 10 டன்கள் கொண்ட லாரியை தோள்களால் இழுத்து அசத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் சத்னம் சிங் இவர் பல காலமாக இதுபோன்ற எடைக்கொண்ட லாரிகளை இழுத்து சாதனைச் செய்தவர். இப்போது 75 வயதிலும் இந்தச் சாதனையை அவர் புரிந்துள்ளார். இது குறித்துப் பேசிய சத்னம் சிங் "இந்தச் சாதனையை செய்வதற்கு எனக்கு இரண்டு மாதம் பயிற்சியே போதுமானதாக இருந்தது" என்றார்.
மேலும் "இப்போதுள்ள இளைஞர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது. இந்த வயதிலேயே இத்தகைய முயற்சியை மேற்கொள்ள முடிகிறது என்றால் இளைஞர்கள் இன்னும் பல சாதனைகள் செய்யலாம் என்கிறார் சத்னம் சிங். முதலில் 110 கிலோ எடையை இழுக்க முயற்சி செய்து தன்னுடைய பயிற்சியை தொடங்கியுள்ளார் சத்னம் சிங்.