இந்தியா

உன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் 7 போலீஸார் "சஸ்பெண்ட்"

உன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் 7 போலீஸார் "சஸ்பெண்ட்"

jagadeesh

உன்னாவ் பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏழு காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியில் இருக்கும்போது உன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் காவல்துறை உயர் அதிகாரி அஜய் குமார் திரிபாதி மற்றும் ஆறு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை,‌‌ பாலியல் வன்கொடுமை‌ செய்தவர்கள் ஜாமீனில்‌‌‌ வெளியே வந்த பின்னர் பெட்ரோல் ‌ஊற்றி தீ வைத்தனர்‌. டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.