இந்தியா

விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...! தொடரும் அவலம்..!

விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...! தொடரும் அவலம்..!

webteam

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு வயல் வெளியில் விட்டுச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

உத்திரபிரதேச மாநிலம் மீருட் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன்கிழமை மாலை 6 வயது சிறுமி ஒருவர் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 20 வயது மர்ம நபர் ஒருவர் சிறுமியை தூக்கிச் சென்று, வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, சுயநினைவு இழந்த சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் காவலர்களுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியை மீருட் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து அவர் மீருட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் சிறுமியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் படி 20 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

இதே போல நொய்டாவில் கடந்த செவ்வாய் கிழமை 12 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் மர்ம நபர் முககவசம் அணிந்திருந்ததால், அவரை கைது செய்வதில் போலீஸாருக்கு கடும் சவால் இருந்தது. அதன் பின்னர் வழக்குக்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இறுதியில் சம்பந்தப்பட்டவர்களுடன் போலீஸார் துப்பாக்கிச் சண்டை நிகழ்த்தி குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.