இந்தியா

கோவிலுக்கு செல்ல சைக்கிள் போதும் - 2200கிமீ பயணத்தை தொடங்கிய 68வயது மூதாட்டி.!

கோவிலுக்கு செல்ல சைக்கிள் போதும் - 2200கிமீ பயணத்தை தொடங்கிய 68வயது மூதாட்டி.!

webteam

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டி ரேகா தேவ்பன்கர்(68). இவர் பக்தியின் காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள தனது வீட்டிலிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்னோ தேவி கோயில்வரை சைக்கிளிலேயே பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார்.

தினமும் 40 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் செய்கிறார் இந்த தைரியமான மூதாட்டி. ஆனால் இரவு நேரங்களில் அவர் சைக்கிள் ஓட்டுவதில்லை. அவர் சைக்கிளில் பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு நெட்டிசன்கள் அதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். வயது வெறும் எண் தானே என்ற கோணத்திலும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது உறுதியையும் தைரியத்தையும் பாராட்டும் விதமாக குறிப்பிட்டுள்ளனர். பெரும்பான்மையானோர் இது சரியான முடிவு அல்ல. பாதுகாப்பானது இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.