இந்தியா

62% பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணிகளையே பயன்படுத்தும் அவலம்..!

62% பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணிகளையே பயன்படுத்தும் அவலம்..!

rajakannan

இந்தியாவில் 62 சதவீதம் பெண்கள் மாதவிடாய் காலங்களில் துணிகளையே பயன்படுத்துகின்றனர் என்று அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. 

பெண்களுக்கான சானடரி நாப்கின்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரியை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் பல்வேறு மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் 62 சதவீதம் இளம் பெண்கள் தங்களது மாதவிடாய் காலங்களில் நாப்கின்களுக்கு பதிலாக துணிகளையே பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 82 சதவீதம் பெண்கள் துணிகளை பயன்படுத்துகின்றனர். அதற்கடுத்த நிலையில், சட்டீஸ்கர் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் 81 சதவீதம் பெண்கள் நாப்கின்களை பயன்படுத்துவதில்லை. 

மிஸோரம் மாநிலத்தில் அதிகபட்சமாக 93 சதவீதம் பெண்கள் நாப்கின்களை பயன்படுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 91 சதவீதம் பெண்கள் நாப்கின்களை பயன்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர்களில் தயாரிக்கப்படும் நாப்கின்களை  16 சதவீதம் பெண்கள் பயன்படுத்துவதாகவும் அதனால் சில நேரங்களில் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.