இந்தியா

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நகரம் இதுதான்!

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நகரம் இதுதான்!

webteam

பாலியல் வன்முறை சம்பவங்கள் பற்றி தேசிய குற்ற ஆவண மையம் (NCRB) வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

கடந்த ஆண்டு சண்டிகரில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 60 சதவிகிதம் சிறுமிகள் என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 69 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சண்டிகரில் நடந்துள்ளன. இதில் 41 பேர், 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். 35 பெண்கள் டீன் - ஏஜ் வயதினர். 
2015-ம் ஆண்டு நடந்த பாலியல் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கைக்கும் 2016-ம் ஆண்டு நடந்துள்ள சம்பவங்களின் எண்ணிக்கைக்கும் அதிக வித்தியாசமில்லை. 2015-ம் ஆண்டு 68 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். இதில் மைனர்கள் 5 பேர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 69 ஆகியுள்ளது. 

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள், பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் உடன் பணிபுரிவர்கள். அதாவது தெரிந்தவர்களே இந்த செயலில் அதிகமாக ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.