நாடு முழுவதும் பொறியியல் பட்டம் பெற்று ஆண்டுதோறும் வெளிவரும் 8 லட்சம் மாணவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர்சரியான வேலை கிடைக்காமல் திண்டாடுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.
இது கிட்டத்தட்ட 20 லட்சம் மனித உழைப்பு நாட்கள் இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்துவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல விடுமுறைக் காலத்தில் பொறியியல் மாணவர்களுக்காக நடத்தப்படும் பயிற்சிப்படிப்புகளில் ஒரு சதவீத அளவிலான மாணவர்களே கலந்துகொள்கின்றனர் எனவும் ஏஐசிடிஇ கூறியுள்ளது. அதேபோல, நாடு முழுவதும் உள்ள 3,200 கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்காக நடத்தும் விடுமுறைகால படிப்புகளில் 15 சதவீத படிப்புகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.