இந்தியா

200 அடி குழிக்குள் விழுந்த 6 வயது குழந்தை: மீட்பு பணி தீவிரம்

webteam

இருநூறு அடி போர்வெல் குழிக்குள் விழுந்த ஆண் குழந்தையை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரவமாக ஈடுபட்டுள் ளனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகே உள்ளது தொரண்டல் கிராமம். இங்கு சாலை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரின் 6 வயது ஆண் குழந் தை ரவி பண்டிட். நேற்று மாலை அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் காணவில்லை.

பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதற்கிடையே, போர்வெல்-லுக்காக அருகில் தோண்டியிருந்த குழிக்குள் இருந்து குழந்தையின் குரல் கேட்டது. குழந்தை 200 அடி கு ழிக்குள் சிக்கியது அப்போதுதான் அவர்களுக்குத் தெரிய வந்தது. 

இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு கூடினர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கயிறு மூல ம் குழந்தையை மீட்க முயன்றனர். முடியவில்லை. இதனால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாகத் தேசிய பேரிடர் குழுவுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்தனர்.

அதற்குள் அந்தக் கிராமத்தினர் குழிக்கு அருகே, பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பேரிடர் குழுவினரின் ஆலோ சனைப்படி குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மருத்துவர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். ஒரு கட்டத்துக்கு மேல் பாறையாக இருந்த தால் உடைக்க முடியவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. விரைவில் மீட்டு விடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.