டெல்லி அருகே பனி மூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருக்கிறது. பனிப்பொழிவின் தாக்கத்தால் 50 மீட்டருக்கும் குறைவான வெளிச்சமே தென்படுவதால் டெல்லி-நொய்டா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டெல்லி விமான நிலையத்துக்கு வந்து சேரவேண்டிய 16 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நகரின் பல்வேறு பகுதியில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாயின. டெல்லியின் புறநகர் பகுதியான கிரேட்டர் நொய்டாவில் போதிய வெளிச்சமின்மையால் நேர்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.