மஹாராஷ்ட்ராவில் துரந்தோ விரைவு ரயில் தடம் புரண்டதற்கு நிலச்சரிவே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மஹாராஷ்ட்ராவில் துரந்தோ விரைவு ரயில் இன்று காலை தடம்புரண்டது. நாக்பூரில் இருந்து மும்பைக்கு சென்றுகொண்டிருந்த ரயில், அசாங்கான் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தடம் புரண்டன. ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன.
மும்பை - நாக்பூர் துரந்தோ விரைவு ரயில் தடம்புரண்டதற்கு நிலச்சரிவே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்றுள்ள ரயில்வே உயரதிகாரிகள் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். விபத்து காரணமாக அவ்வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் வேறு பாதையில் மாற்றி விடப்பட்டுள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.
கடந்த 25ம் தேதி உள்ளூர் மும்பை ரயிலின் 6 பெட்டிகள் மாஹிம் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதில் 5 பயணிகள் காயம் அடைந்தனர். முன்னதாக கடந்த 19ம் தேதி உத்கல் எக்ஸ்பிரஸ் உத்தர பிரதேச மாநிலம் கடோலி அருகே தடம்புரண்டதில் 24 பேர் பலியாயினர். 156 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.