அசாம் - மிசோரம் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 6 போலீசார் உயிரிழந்தனர்.
அசாம் மாநிலம் குலிசெர்ராவின் எல்லையோரப்பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில், பாதுகாப்பு பணியில் இருந்த 6 போலீசார் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அசாம் - மிசோரம் மாநில எல்லையில் குண்டுவெடிப்பும் நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரு மாநில முதல்வர்களும் ட்விட்டரில் வார்த்தை போர் நிகழ்த்தி வந்தனர். அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் டேக் செய்திருந்தனர். இதனால் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என இரு மாநில முதலமைச்சர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.