இந்தியா

மேற்கு வங்கத்தில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு: மாலை 6 மணி நிலவரப்படி 78.36% வாக்குகள் பதிவு

மேற்கு வங்கத்தில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு: மாலை 6 மணி நிலவரப்படி 78.36% வாக்குகள் பதிவு

Veeramani

மேற்கு வங்கத்தில் 5ஆவது கட்ட சட்டப்பேரவை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 78.36% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் 5ஆவது கட்டமாக 45 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இவ்வாக்குப்பதிவின் போது பல்வேறு இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் மூண்டது. கல் வீச்சுத் தாக்குதல்களும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

West Bengal: Voters queue up outside a polling booth in Bidhannagar.

Voting for the fifth phase of #WestBengalElections2021 is underway today. pic.twitter.com/SQFYN0Yo3W
— ANI (@ANI) April 17, 2021

24 பர்கானா மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் துணை ராணுவப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டினர். ஆனால் இதை துணை ராணுவம் மறுத்துள்ளது. இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன.