சாலை விபத்து முகநூல்
இந்தியா

சாலை விபத்து மரணங்களில் தமிழகத்துக்கு 2-வது இடம்.. 6 மாநிலங்களில் மட்டும் நிகழும் 55% உயிரிழப்புகள்!

இந்தியாவில் நடந்தேறும் ஒட்டுமொத்த சாலை விபத்து மரணங்களில் 55%, ஆறு மாநிலங்களில் மட்டுமே நிகழ்வதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

PT WEB

இந்தியாவில் நடந்தேறும் ஒட்டுமொத்த சாலை விபத்து மரணங்களில் 55%, ஆறு மாநிலங்களில் மட்டுமே நிகழ்வதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

சாலை விபத்து

அதன்படி உ.பி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களில் சாலை விபத்து மரணங்கள் அதிகளவில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதிகளவு சாலை விபத்து மரணங்கள் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்தாலும் இவ்வகை மரணங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகத்தில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளதும் அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.