இந்தியா

ஹைதராபாத் கனமழை: 50 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள்

ஹைதராபாத் கனமழை: 50 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள்

Veeramani

ஹைதராபாத் நகரில் கனமழை காரணமாக இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன.

ஹைதராபாத் நகரில் ஒரேநாள் இரவில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. நகரின் பெரும்பாலான வீதிகள் வெள்ள நீரில் மூழ்கி, வாகனங்கள் மிகவேகமான நீரோட்டங்களில் அடித்துச் செல்லப்படுகின்றன, ஹைதராபாத்தின் சில பகுதிகள் மட்டுமின்றி நகரை ஒட்டிய பல பகுதிகளையும் இம்மழை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த ஒருவார காலமாக பெய்துவரும் கனமழை காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன, இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளர் என்று அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரின் சில பகுதிகளில் நாள் முழுவதும் 150 மி.மீ க்கும் அதிகமான கனமழை பொழிந்தது, இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (ஜி.எச்.எம்.சி) பேரிடர் மீட்புப் படை (டி.எச்.எஃப்) பணியாளர்கள் நகரில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் மூழ்கியுள்ள பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத் மட்டுமின்றி தெலங்கானா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வீட்டுக்கே சென்று ரேஷன் கிட் வழங்கப்படும்” என்று கூறினார்.