மாதிரிப் படம் எக்ஸ் தளம்
இந்தியா

சிறுமி வன்கொடுமை |புகாரை திரும்பப் பெற மறுப்பு.. 50 பட்டியலின குடும்பத்தை வெளியேற்றிய உயர்சாதியினர்!

Prakash J

கர்நாடகாவில் உள்ள யாத்கிர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில், உயர்சாதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தச் சிறுமி 5 மாத கர்ப்பமான நிலையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் அந்த இளைஞர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதன்படி போலீசார் போக்ஸோ வழக்கு பதிந்துள்ளனர். இந்த நிலையில் அந்தப் புகாரை வாபஸ் வாங்குமாறு அந்தக் கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினரால் சிறுமியின் குடும்பத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

sex harassment

ஆனால் சிறுமியின் குடும்பம் விடாப்பிடியாக மறுத்த நிலையில், புகாரை வாபஸ் வாங்கும்வரை அந்த கிராமத்தில் வசிக்கும் 50 பட்டியலின குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கவும், கோயில்களில் வழிபாடு செய்யவும், பொது இடங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், பட்டியலின அமைப்பினர் குற்றஞ்சாட்டப்பட்ட

நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதேநேரத்தில், இதுதொடர்பாக இருதரப்பிலும் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஜிம்பாப்வே| நிதியை அள்ளித்தரும் ஐசிசி.. நீர்வீழ்ச்சி அருகே அமைய இருக்கும் புதிய மைதானம்!