இந்தியா

கர்நாடகா: நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

webteam

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரிதர் என்பவர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் கலபுர்கியில் உள்ள கங்காபூர் கோயிலுக்குச் காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது, கர்நாடக மாநிலம் பிதார் தாலுகாவில் உள்ள பங்கூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த கிரிதர் (45), அவரது மனைவி அனிதா (36), மயங்க், அனிதாவின் இளைய மகள் பிரியங்கா மற்றும் ஹைதராபாத்தில் தலைமைக் காவலராக இருந்த பேகம் பேட்டாவைச் சேர்ந்த கார் டிரைவர் தினேஷ் (35) ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும் உயிரிழந்த கிரிதரின் மகன் ஹர்ஷவர்தன் (12) காயமின்றி உயிர் தப்பியுள்ளார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த சிலர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பேகம்பெட் பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து கல்புர்கியில் உள்ள கங்காபூர் கோயிலுக்கு செல்லும்போது பீதர் தாலுகாவில் உள்ள பங்கூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து மணலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.