பஞ்சாப் மாநிலத்தின் தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கெம்கரன் எல்லைப் பகுதி வழியாக இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற 5 பயங்கரவாதிகள் பி.எஸ்.எஃப் ரோந்து குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இன்று அதிகாலை நடந்த மோதலில் எல்லையில் ஊடுருவியவர்கள் எல்லை பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பி.எஸ்.எஃப் துருப்புக்கள் நேற்று நள்ளிரவு முதல் எல்லையில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கவனித்தன, அதைத் தொடர்ந்து அவர்கள் ஊடுருவியவர்கள் மீது கவனம் செலுத்தி கண்காணிப்பைத் தொடங்கினர். ஊடுருவியவர்கள் கைகளில் துப்பாக்கிகளையும் வைத்திருந்தனர். அவர்கள் இந்தியாவுக்குள் பதுங்குவதற்கு "சர்கந்தா" பகுதி அல்லது உயரமான புல்தரைகளை நோக்கி நகர்ந்தபோது எல்லைபாதுகாப்பு படைவீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள்
27 சுற்றுகள் கொண்ட ஏ.கே-47 துப்பாக்கி மற்றும் 109 சுற்றுகள் கொண்ட ஏழு கைத்துப்பாக்கிகள் போன்றவை ஊடுருவியவர்களிடமிருந்து மீட்கப்பட்டது என்று பிஎஸ்எஃப் ட்வீட் செய்துள்ளது. ஆயுதங்களைத் தவிர, ஊடுருவியவர்கள் ஹெராயின் என சந்தேகிக்கப்படும் 9.920 கிலோ கான்ட்ராபண்ட் கொண்டு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டதுடன் பாகிஸ்தான் பணமும் அவர்களிடம் கைப்பற்றப்பட்டுள்ளது.