“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன்பேரில் அந்த பகுதி முழுவதுமே ராணுவ வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்கனவே அந்த பகுதியில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை இயக்கி வெடிக்க செய்ததாக தெரிகிறது.
இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 2 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து மொத்தமாக 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் மோசமான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஜோரி மாவட்டம் முழுவதுமே இணைய சேவையானது துண்டிக்கப்பட்டு தகவல் பரிமாற்றம் அனைத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளை தேடும் பணியானது முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக ராணுவ வீரர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஒருபுறம் அதிகரித்துவரும் நிலையில் மறுபுறம் என்கவுண்டர் செய்து தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர்.
இன்று கோவா மாநிலத்தில் நடைபெறுகிற ஷாங்காய் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் வருகை புரிந்திருக்கும் இச்சூழலில் இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.