நான்காம் கட்ட தேர்தல் முகநூல்
இந்தியா

தீவிரமாக நடந்து முடிந்த நான்காம் கட்ட தேர்தல்... வாக்குப்பதிவு எவ்வளவு சதவிகிதம்?

நேற்று (மே 13) நடைபெற்ற நான்காம் கட்ட மக்களவைத் தேர்தலில் 67.25 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது முந்தையக் கட்டத் தேர்தல்களை காட்டிலும் சற்று அதிகமாகும்.

PT WEB

மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 13) நடைபெற்றது. மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இரவு 11.45 மணி வரை கிடைத்த தகவலின் படி 67.25 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

vote

முந்தைய 2019ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்குப்பதிவினை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போது 1.74 விழுக்காடு வாக்குகள் அதிகமாகப் பதிவாகி உள்ளது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் 78.44 விழுக்காடும், ஆந்திர மாநிலத்தில் 78.25 விழுக்காடும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

முதல் கட்டத் தேர்தலில் 66.14 விழுக்காடு வாக்குகளும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 66.71 விழுக்காடு வாக்குகளும், மூன்றாம் கட்டத் தேர்தலில் 65.68 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியிருந்தன. அந்தவகையில் நான்காம் கட்டத்தில் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரிக்கவே செய்துள்ளது.