இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட 4ஜி சேவை மீண்டும் தொடங்கியது!

ஜம்மு காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட 4ஜி சேவை மீண்டும் தொடங்கியது!

sharpana

ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்டிருந்த 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்தது மத்திய அரசு. மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்து. சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்து. அதிலிருந்து ஜம்மு காஷ்மீரில் அதிவேக இன்டெர்நெட் 4ஜி தொடர்பு மாநிலம் முழுவதும் துண்டிக்கப்பட்டு 2ஜி சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா சூழலில் ஆன்லைன் வகுப்புகள் பாதிக்கப்படுகிறது என்பதால் 4ஜி சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பலர் வழக்கும் தொடர்ந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜம்மு – காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் மட்டும் 4ஜி சேவை வழங்கியது மத்திய அரசு. தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வரவே, இன்று முதல் மீண்டும் 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனை, ஜம்மு காஷ்மீரின் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.