டெல்லியில் பணிபுரிந்து வரும் 45 ராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அறிகுறி இல்லாத மக்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றும் பல மாநிலங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன் படி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்தப் பரிசோதனையின் முடிவில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உட்பட 24 ராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்தியா - திபெத் இடையே பணி புரியும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 45 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த 45 பேரில் 43 பேர் டெல்லியில் ஐ.எஸ் ராணுவ பிரிவில் பணிபுரிவதாகவும், மீதம் இரண்டு பேர் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரிவில் பணிபுரிவதாகவும் கூறப்பட்டுள்ளது