இந்தியா

மனத்துன்பத்தில் உள்ள 40% இந்திய ஊழியர்கள் : ஆய்வில் தகவல்..!

மனத்துன்பத்தில் உள்ள 40% இந்திய ஊழியர்கள் : ஆய்வில் தகவல்..!

webteam

இந்தியாவில் இருக்கும் ஊழியர்களில் 40% பேர் கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின்னர் மனதுன்பத்திற்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோடிக்கணக்கானோரின் வேலைகளை பறித்துவிட்டது. மேலும் பெரும்பாலான ஊழியர்களின் ஊதியத்தையும் குறைத்துள்ளது. இதனால் கொரோனா பொதுமுடக்க காலத்திற்குப் பின்னர் பணிபுரியும் இந்திய ஊழியர்களில் 5ல் 2 பேர் மனவருத்தத்துடன் இருப்பதாக ‘லிங்கிடுஇன்’ என்ற வேலைவாய்ப்பு சமூக வலைத்தளம் நடத்தி ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு இந்த மனவருத்தம் என்பது கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னரே வந்திருப்பதாகவும், வேலை உறுதியின்மை, பொருளாதார நெருக்கடி, தொடர்ச்சியான வேலைப்பளு, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இந்த மனவருத்தம் ஏற்பட்டிருப்பதும் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது அவர்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மனநல தினத்தையொட்டி இந்த ஆய்வை லிங்கிடுஇன் வெளியிட்டிருக்கிறது.