இந்தியா

கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு: 27 பேர் படுகாயம்

கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு: 27 பேர் படுகாயம்

webteam

மேற்கு வங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காயமடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள கச்சுவாவில் லோக்நாத் கோயில் உள்ளது. கிருஷ்ண பிறப்பை முன் னிட்டு இந்த கோயிலுக்கு இன்று ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று காலை 3 மணியளவில் மழை பெய்ததால், வெளியே நின்ற பக்தர்கள் அனைவரும் கோயிலுக்குள் ஓடினர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 27 -க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மழை காரணமாக பக்தர்கள் கூட்டமாக கோயிலுக்குள் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டது என்றார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்தையும் காயமடைந்தவர்களு ரூ. 1 லட்சத்தையும் இழப்பீடாக வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.