கண்டெய்னர்  புதிய தலைமுறை
இந்தியா

ஆந்திரா| 4 கண்டெய்னர்கள்.. ரூ.2,000 கோடி.. சோதனையில் பிடிபட்ட பணம் யாருடையது? உறுதியான தகவல்!

PT WEB

ஆந்திராவில் மே 13ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டுசெல்வதைத் தடுக்க மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அனந்தபுரம் மாவட்டம் பாமிடி மண்டலம் கஜ்ராம்பள்ளியில் நடந்த வாகனச் சோதனையில் 4 கண்டய்னெர்களில் 2,000 கோடி ரூபாய் பணம் பிடிபட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பாமிடி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் போலீசார் கஜரம்பள்ளியில் வாகனச் சோதனையில் அடுத்தடுத்து வந்த 4 கன்டெய்னர்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவற்றில் கட்டுக்கட்டாக ரூ.2,000 கோடி பணம் இருப்பது கண்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்த தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிக்க: வாரணாசி| பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் காமெடி நடிகர்.. யார் இந்த ஷியாம் ரங்கீலா?

இந்த விசாரனையில், ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு கொண்டுசெல்வது தெரியவந்தது. அதற்கான ஆவணங்களை சரிபார்த்து அனைத்தும் அரசு உத்தரவுகளுடன் செல்வது உறுதி செய்யப்பட்டு அனுப்பிவைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.