UP-student-krish movie- Super Hero- Imitate Twitter
இந்தியா

”க்ரிஷ்” படம் பார்த்து தன்னை சூப்பர் ஹீரோவாக நினைத்து 8 வயது சிறுவன் செய்த விபரீத செயல்!

ஹிருத்திக் ரோஷன் சூப்பர் ஹீரோவாக நடித்த க்ரிஷ் படத்தை பார்த்து தன்னை சூப்பர் ஹீரோவாக நினைத்து 3 ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் ஸ்டன்ட் செய்ததால் முகம் மற்றும் கால்களில் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

PT WEB

உத்திரப்பிரதேசம் கான்பூரை சேர்ந்தவர் சிறுவன் கித்வாய் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். ஹிருத்திக் ரோஷன் சூப்பர் ஹீரோவாக நடித்த கிரிஷ் திரைப்படங்களை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டுள்ளார் அந்த சிறுவன். அந்த படத்தின் காட்சிகளை போல் தானும் ஸ்டன்ட் காட்சிகளை செய்யவிரும்புவதாக தன் தாயிடம் கூறியுள்ளார்.

ஒருநாள் அந்த விபரீத முயற்சியையும் சிறுவன் மேற்கொண்டார். அதவது, தண்ணீர் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு தனது நண்பர்களுடன் பள்ளியின் முதல்தளத்திற்கு சென்ற சிறுவன் மேலிருந்து கிழே குதிக்கவே முகம் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

UP-student-krish movie- Super Hero- Imitate

இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தது. இச்சம்பவம் அங்குள்ள CCTV கட்சியில் பதிவாகியுள்ளது. 8 வயது சிறுவனின் மனதில் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் நடந்துள்ள சம்பவத்தை கண்டவர்கள் மனதில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக சக்திமான் போன்ற தொலைக்காட்சி தொடர்களின் தாக்கம் அந்த கால சிறுவர்கள் மத்தியில் இருந்தது.

குறிப்பு: புனைக்கதைகளை உண்மைகதைகளாக நினைத்து உண்மைக்கு மாறாக நடைபெறும் சம்பவத்துக்கு இது உதாரணம். நிஜம் எது நிழல் எது என்று பகுத்தறியும் ஆளுமையை குழந்தைகக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய அவசியமாக உள்ளது. திரைப்படங்களில் வரும் அனைத்தும் உண்மையல்ல என்பதை புரியவைக்கவேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்களும் , கல்வி கூடங்களும் இருக்கின்றனர் என்பதை உணரவேண்டும்.

- ஜெனிட்டா ரோஸ்லின்