இந்தூர் facebook
இந்தியா

இந்தூர்|கொடூரமாக துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமை; பெண்ணிற்கு நடந்த கொடூரம்- நடவடிக்கை எடுக்க தாமதம்!

இந்தூரில் 34 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து , சாட்டையால் அடித்து நடனமாட வற்புறுத்தியதாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்தூரில் 34 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து , சாட்டையால் அடித்து நடனமாட வற்புறுத்தியதாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று, மத்திய பிரதேசம் இந்தூரில் 34 வயதுடைய பெண் ஒருவர் குடோனுக்கு கடத்தி வரப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, கடந்த ஜூலை 17 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் போலீசாரில் அளித்த புகாரில், பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தொலைக்காட்சியில் இயற்கைக்கு மாறான வீடியோக்களை பார்த்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தன்னை பெல்ட்டால் அடித்து, அரைமணி நேரம் நிர்வாணமாக நடனமாட வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இப்பெண் புகார் அளித்தும், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இப்பெண் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் இது குறித்து மனு தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த சூழலில், இப்பெண் அளித்த புகாரை பரிசீலித்து 90 நாட்களுக்குள் தீர்ப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடியா காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பித்தது,

தொடர்ந்து, தீர்ப்பு வெளிவந்த 19 நாட்களுக்கு பிறகு இதில் தொடர்புடைய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும், தற்போதுவரை இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தெரிவித்த மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலாப் சுக்லா, ”குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர். ஆகவே, காவல்துறை மீது பாஜகவின் அழுத்தம் காரணமாக எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டடுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.