உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் மேலும் 34 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஆக்ஸிஜன் இல்லாததால் சுமார் 70 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். அதே மருத்துவமனையில் மூளை பாதிப்பால் 6 குழந்தைகள் உயிரிழந்ததாக கடந்த செவ்வாய்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையிலிருந்து புதன் கிழமை வரையிலான 3 நாட்களில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக கோரக்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். மூளை வீக்க நோய் காரணமாக குழந்தைகள் இறப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் இறந்ததாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்கிறது.