இந்தியா

நாளுக்கு நாள் புதிய உச்சம்.. மகாராஷ்டிராவில் வேகமாக பரவும் கொரோனா பாதிப்பு

நாளுக்கு நாள் புதிய உச்சம்.. மகாராஷ்டிராவில் வேகமாக பரவும் கொரோனா பாதிப்பு

webteam

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,390 ஆக உள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து எட்டாயிரத்தை நெருங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,390 ஆக உள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,958 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனாவுக்கு மொத்த உயிரிழப்பு 3,950 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 50,978 பேர் கொரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளது. மும்பை தாராவி பகுதியில் நேற்று மட்டும் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,043 ஆக உள்ளது. இதில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,395 ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,135 ஆக உயர்ந்துள்ளது.