BSNL facebook
இந்தியா

திரும்ப வந்துட்டோம்... பெருமிதம் கொள்ளும் BSNL!

பொதுத்துறையைச் சேர்ந்த பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் 30 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்திருப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

PT WEB

பொதுத்துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் 30 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்திருப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மிகப்பெரிய நிறுவனங்கள் கூட இந்த மாதத்தில் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. குறிப்பாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் ஜூலையில் 17 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடோஃபோன் ஐடியா 14 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த அளவாக 8 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருப்பது ட்ராயின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

அதேபோல, ஆகஸ்ட் மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மட்டுமே வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்திருந்த நிலையில், மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்ததே பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பக்கம் பொதுமக்களின் பார்வை திரும்ப காரணமாக அமைந்துள்ளது.