இந்தியா

கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

jagadeesh

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்திலுள்ள சித்தகங்கா மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடந்த சில நாட்களாக 15 000 முதல் 19,000 வரை தோற்று கண்டறியப்பட்டு வருகிறது இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலம் துமாகூர் மாவட்டத்தில் உள்ள சிதாகங்க மடத்தில் துவக்க பள்ளி முதல் கல்லூரி வரை இயங்கி வருகிறது.

இங்கு பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழைக்குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் இவர்கள் அங்குள்ள விடுதியில் தங்கி பயின்று வருகிறார்கள். இங்கு மொத்தம் 10 ஆயிரம் குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இவர்களில் 8 ஆயிரம் குழந்தைகள் சொந்த ஊர் திரும்பிய நிலையில் விடுதியில் 2 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர் .

இவர்களில் சிலருக்கு காய்ச்சல் காரணமாக கொரோன பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 30 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்து, மடத்தில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதம் உள்ள குழந்தைகளுக்கு கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு எத்தனை குழந்தைகள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வரும். கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புகழ்பெற்ற சித்தகங்கா மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.