நோய்வாய்ப்பட்ட குழந்தையை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கொடுக்காததால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்
பீகாரின் ஜெகனாபாத்தில் உள்ள ஒரு தம்பதி தங்களுடைய 3 வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் போக்குவரத்து ஏதும் இல்லாததால் ஆம்புலன்ஸ் சேவையை அணுகியதாக தெரிகிறது. ஆனால் ஆம்புலன்ஸ் அனுப்ப அரசு மருத்துவமனை மறுத்துவிட்டதாக குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை அடுத்து குழந்தையை தன் மார்போடு அணைத்தபடி அக்குழந்தையின் தாய் அழுதுகொண்டே சாலையில் தூக்கிச் சென்ற சம்பவம் காண்போரைக் கண்கலங்க வைத்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெகனாபாத் மாவட்ட நீதிபதி, இது குறித்த உண்மை நிலை எனக்கு தெரியவில்லை. உரிய
விசாரணையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.