பாம்பு  எக்ஸ் தளம்
இந்தியா

யானை அச்சுறுத்தலுக்கு பயந்து ஓட்டு வீட்டில் தூங்கிய குழந்தைகள்.. பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்!

Prakash J

ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள சப்காலி கிராமத்தில், யானைகள் நடமாட்டம் அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக யானைகள் அடிக்கடி உணவைத் தேடி அந்தக் கிராமத்திற்குள் நுழைவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், யானை அச்சுறுத்தலுக்குப் பயந்து ஓட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகளை விஷ பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதில் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சடலம்

பன்னலால் கோர்வா (15), கஞ்சன் குமாரி (8) மற்றும் பேபி குமாரி (9) என மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாக, சினியா காவல் நிலையப் பொறுப்பாளர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அந்த 3 குழந்தைகளும், யானைகள் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பான இடங்களில் உறங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமன்றி, அந்த கிராமமே பள்ளி கட்டடங்கள் அல்லது வேறு இடத்தில் இடத்தில் ஒரே குழுவாக தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் அங்குள்ள ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

அப்படி தூங்க சென்றபோதே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆகவே விரைந்து மக்கள் பாதுகாப்புக்கு அரசு ஏதேனும் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிக்க; கட்சியில் இணைந்த வினேஷ் போகத்| “எனக்கு எதிரான போராட்டம் காங்கிரஸின் சதி” - பிரிஜ் பூஷண் சரண் சிங்