இந்தியா

புதிதாக திறக்கப்பட்ட அடல் சுரங்கப் பாதையில் கடந்த 72 மணி நேரத்தில் 3 விபத்துகள்!

புதிதாக திறக்கப்பட்ட அடல் சுரங்கப் பாதையில் கடந்த 72 மணி நேரத்தில் 3 விபத்துகள்!

JustinDurai

உலகின் மிக நீளமான அடல் நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை பிரதமர் திறந்து வைத்த 72 மணி நேரத்தில் 3 விபத்துகள் நிகழ்ந்துள்ளது.

உலகின் மிக நீளமான மற்றும் அகலமான அடல் சுரங்கப் பாதையை இமாச்சல் பிரதேசத்தில் பிரதமர் மோடி கடந்த 3ம் தேதி திறந்து வைத்தார். இமாச்சலப் பிரதேசத்தில் மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்காக நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. வாஜ்பாய் நினைவாக இந்த சுரங்கத்துக்கு அடல் என பெயரிடப்பட்டுள்ளது.

இதனிடையே சுரங்கப் பாதை திறந்து வைக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள்ளாக மூன்று விபத்துக்கள் நடந்துள்ளதாக பார்டர் ரோடு ஆர்கனைசேசன் தலைமை பொறியாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சுரங்கப் பாதையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து அக்டோபர் 3-ம் தேதி உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தற்போது  மூன்று விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம்.

ஒரு சில வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை சாலை நடுப்பகுதியில் நிறுத்தி செல்ஃபி எடுத்துள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் சுரங்கப் பாதை இரு வழி பாதையாக இருப்பதால் முந்தி செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் எளிதில் தீப்பற்றக்கூடியதான பெட்ரோல் சிலிண்டர் ஏற்றிச் செல்லும் லாரிகள் இப்பதையில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

சுரங்கப்பாதை பாராமரிப்பு பணிக்காக தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மூடப்படும்'' என்றார்.