இந்தியா

மீனவர் கொல்லப்பட்ட சம்பவத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

மீனவர் கொல்லப்பட்ட சம்பவத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Rasus

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் சரக்கு மற்றும் சேவை வரியை செயல்படுத்துவதற்கான சட்டங்களை இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரம் ஐஎஸ் பயங்கரவாதி தாக்குதல், ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இன்று கூட்டம் தொடங்கியவுடன் உயிரிழந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்த தேவையான மத்திய ஜிஎஸ்டி மசோதா மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மசோதா ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

வாகன விதிமுறை மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் மோட்டார் வாகன திருத்த சட்டம் உள்ளிட்டவற்றையும் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. 11-ம் தேதி வெளியாகவுள்ள உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின் முடிவுகள் நாடாளுமன்றத்திலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.